‘மாநாடு’ படம் விரைவில் OTT தளத்தில் ரிலீசாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் நடிகர் சிம்பு முன்னணி நடிகராக வலம் வருபவர். வெங்கட்பிரபு இயக்கத்தில் இவர் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ”மாநாடு”. இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா, எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். சுரேஷ் காமாட்சி தயாரித்த இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
இந்நிலையில், நவம்பர் 25ம் தேதி வெளியான இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனையடுத்து, இந்தத் திரைப்படம் பிரபல OTT நிறுவனமான சோனி லைவ் OTT தளத்தில் ரிலீசாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
The Biggest Blockbuster of the Year! Maanaadu, Starring #SilambarasanTR and #SJSurya streaming soon on SonyLIV. Loop Starts Soon. #WatchItOnRepeat #MaanaaduOnSonyLIV@sureshkamatchi @vp_offl @SilambarasanTR_ @kalyanipriyan @premgiamaren @thisisysr @iam_SJSuryah pic.twitter.com/ov39Z2ktyt
— Sony LIV (@SonyLIV) December 14, 2021