Categories
தேனி மாவட்ட செய்திகள்

குற்றவாளிகள் அளித்த வாக்குமூலம்… மேலும் 4 பேர் கைது… சரக்கு வேனும் பறிமுதல்..!!

தேனி மாவட்டத்தில் மான் வேட்டையாடிய வழக்கியில் மேலும் 4 பேரை கைது செய்த போலீசார் தலைமறைவான 2 பேரை தேடி வருகின்றனர்.

தேனி மாவட்டம் கூடலூரில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியில் கடந்த 2 வாரத்திற்கு முன்பு வனத்துறையினர் சோதனை ஈடுபட்டபோது மான் வேட்டையாடிய குற்றத்திற்காக கூடலூரை சேர்ந்த சூர்யா மற்றும் செந்தில்குமார் ஆகிய இருவரை கைது செய்துள்ளனர். இதனையடுத்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் மான் வேட்டையில் மேலும் 6 பேருக்கு தொடர்பு இருப்பதாக வாக்குமூலம் அளித்துள்ளனர்.

அதனடிப்படையில் கம்பம் மேற்கு வனசரகர் அன்பு தலைமையில் வனத்துறையினர்  தீவிரமாக தேடி வந்துள்ளனர். இதனைத்தொடர்ந்து மான் வேட்டையாடிய வழக்கில் தொடர்புடைய கூடலூரை சேர்ந்த முருகன்(41), முத்துப்பாண்டி(31), பால்பாண்டி(27), சூரிய பிரபு(29) ஆகிய 4 பேரை கைது செய்த வனத்துறையினர் தலைமறைவான பாலமுருகன், விஜய் ஆனந்த் ஆகிய 2 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் மான் வேட்டையாட பயன்படுத்திய சரக்கு வேனையும் பறிமுதல் செய்துள்ளனர்.

Categories

Tech |