நாமக்கல் மாவட்டத்தில் மதுவிலக்கு போலீசார் சோதனை செய்ததில் வீட்டில் வைத்து சாராயம் காய்ச்சியவரை கைது செய்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தை அடுத்துள்ள கரட்டாங்காடு பகுதியில் சாராயம் காய்ச்சுவதாக திருச்செங்கோடு மதுவிலக்கு காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் சசிகுமார் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் ராம், பிரபு மற்றும் காவல்துறையினர் அப்பகுதியில் அதிரடி சோதனை நடத்தி உள்ளனர்.
இதனையடுத்து கரட்டாங்காடு பகுதியை சேர்ந்த மனோகரன்(46) என்பவர் அவரது வீட்டில் வைத்து சாராயம் காய்ச்சியது தெரியவந்துள்ளது. இதனைத்தொடர்ந்து அங்கு சென்று மனோகரை கைது செய்த போலீசார் அவர் காய்ச்சிய 5 லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் அவர் வைத்திருந்த 200 லிட்டர் சாராய ஊறலையும் அழித்துள்ளனர்.