ராமநாதபுரம் மாவட்டத்தில் சட்ட விரோதமாக மணல் அள்ளிக்கொண்டிருந்த 2 பேரை கைது செய்து சரக்கு லாரியை பறிமுதல் செய்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை பகுதியில் துணை வட்டாட்சியர் சேதுராமன் தலைமையில் அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். அப்போது ஓரியூர் பாம்பாறு பகுதியில் சட்டவிரோதமாக மணல் அள்ளப்படுவதாக தகவல் கிடைத்துள்ளது. இதனையறிந்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை நடத்தியுள்ளனர்.
அப்போது அங்கு மணல் அள்ளிக்கொண்டிருந்த திருவெற்றியூரை சேர்ந்த மணிகண்டன்(26), கோவிந்தமங்கலம் பகுதியை சேர்ந்த நாகநாதன்(56) ஆகிய இருவரிடம் விசாரணை நடத்தி கைது செய்துள்ளனர். மேலும் மணல் அள்ள பயன்படுத்திய சரக்கு லாரியையும் பறிமுதல் செய்துள்ளனர்.