Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்… அதிரடி சோதனை செய்த போலீசார்… 3 பேர் கைது…!!

நெல்லை மாவட்டத்தில் அனுமதியின்றி வேன் மூலம் மணல் அள்ளிய 3 பேரை போலீசார் கைது செய்துள்ளார்.

நெல்லை மாவட்டம் பழவூரை அடுத்துள்ள கூத்தாண்டவர்குளத்தில் அனுமதியின்றி மணல் அள்ளப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் பழவூர் காவல்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து அப்பகுதியில் 3 பேர் மணல் அள்ளிக்கொண்டிருந்தது தெரியவந்துள்ளது.

இதனைத்தொடர்ந்து போலீசார் விசாரித்ததில் அவர்கள் செட்டிகுளத்தை சேர்ந்த சதீஷ்(25), ஊரல்வாய்மொழியைச் சேர்ந்த இசக்கியப்பன்(36), கீழ்குளத்தை சேர்ந்த ஆனந்தராஜ்(32) என்பது தெரிய வந்துள்ளது. மேலும் அவர்கள் 2 வேன்களில் அனுமதியின்றி மணல் அள்ளிக்கொண்டிருந்துள்ளனர். அதனை பறிமுதல் செய்த போலீசார் மணல் அள்ளிய 3 போரையும் கைது செய்துள்ளனர்.

Categories

Tech |