நாமக்கல் மாவட்டத்தில் அனுமதியின்றி நாட்டு துப்பாக்கி வைத்திருந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை அடுத்துள்ள வடகாடு பகுதியில் சேகர்(39) என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் அவர் அனுமதி இல்லாமல் நாட்டு துப்பாக்கி வைத்திருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து வாழவந்திநாடு சப்-இன்ஸ்பெக்டர் கங்காதரன் தலைமையிலான காவல்துறையினர் உடனடியாக அப்பகுதியில் சென்று விசாரணை செய்துள்ளனர்.
அப்போது சேகர் அவரது தோட்டத்தில் நாட்டு துப்பாக்கியை வைத்திருந்தது உறுதியாகியுள்ளது. இதனைதொடர்ந்து அனுமதியின்றி நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்ததால் சேகரை கைது செய்த போலீசார் துப்பாக்கியையும் பறிமுதல் செய்துள்ளனர்.