சென்னை விமான நிலையத்துக்கு கடத்தல் பொருள்கள் கொண்டுவரப்படுவதாக விமான நிலைய சுங்கத் துறை அலுவலர்களுக்கு ரகசிய தகவல்கள் கிடைத்தது. அதன்பேரில் சுங்கத்துறை அலுவலர்கள் தீவிர கண்காணிப்பில் இருந்தனர்.
அப்போது, தாய்லாந்திலிருந்து சென்னை வந்த இப்ராகிம் ஷா (38) என்பவரிடம் அலுவலர்கள் விசாரித்தனர். ஆனால், முன்னுக்குப் பின் முரணாக பேசியதால் அவரது உடமைகளைச் சோதனை செய்தனர். அதில் ஆப்பிரிக்காவில் வாழும் ஒரு பச்சோந்தி, ஐந்து சிலந்திகள், ஒரு தவளை, ஒரு எலி, மெக்சிகோ நாட்டில் வாழும் ஓணான், சஹாரா பாலைவனத்தில் வாழும் நான்கு கொழுப்பு வால் எலி, இரண்டு பாலைவன கீரி இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.