விருச்சிக ராசி அன்பர்களே…!!! இன்று தொட்டது துலங்கும் நாளாக இருக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். புதியவர்கள் நண்பர்களாவார்கள். இன்று வியாபாரத்தில் புதிய முதலீடுகளைச் செய்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் உங்களை மதிக்க கூடும். நிம்மதி கிட்டும் நாளாகவே இன்றைய நாள் இருக்கும்.
அதுமட்டுமில்லாமல் இன்று எதையும் நன்கு யோசித்து பின்னர் செய்வது நன்மையை கொடுக்கும். மாணவர்கள் நிதானமாக ஆழ்ந்த கவனத்துடன் பாடத்தை படிப்பது சிறப்பு. மனக்கஷ்டம், பண கஷ்டம் இன்று ஓரளவு சரியாகும். உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை ரொம்ப சிறப்பாகவே இருக்கும். இன்று கணவன் மனைவிக்கிடையே மட்டும் சின்னதாக பூசல்கள் வரக்கூடும். குடும்பத்தார் பேசுவதை நீங்கள் சரியான முறையில் கூர்ந்து கவனித்து, அதற்கு ஏற்றார்போல் பதில் கொடுங்கள்.
அப்பொழுது தான் வாக்குவாதங்களை நாம் தவிர்க்க முடியும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது, சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள். அனைத்துக் காரியமும் நல்லபடியாக நடக்கும்.