இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் 4 இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தேனி மாவட்டம் போடி பகுதியில் உள்ள சங்கராபுரம் கிழக்கு தெருவில் விக்னேஸ்வரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது பிறந்தநாளை கொண்டாடிவிட்டு சக நண்பர்களுடன் இருசக்கர வாகனத்தில் வேகமாக கூச்சலிட்டுகொண்டே சென்றுள்ளனர். இதனை அதே பகுதியை சேர்ந்த பிரபாகரன், கருணாகரன், அஜித், பாண்டி ஆகிய 4 இளைஞர்களும் விக்னேஸ்வரன் மற்றும் அவரது நண்பர்களை சாதி பெயரை கூறி தகராறில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது அங்கு சென்ற விக்னேஷ்வரனின் தாய் முருகேஸ்வரி, தம்பி வினோத்குமார் ஆகியோர் அந்த இளைஞர்களை கண்டித்துள்ளனர். இதனால் இரு தரப்பினர்களிடையே தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டுள்ளனர். இந்த மோதலில் மமுருகேஸ்வரி, விக்னேஷ்வரன், வினோத்குமார் ஆகிய 3 பேருக்கும் பலத்தகாயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தகவலறிந்து சென்ற போடி தாலுகா காவல்துறையினர் விசாரணை நடத்தி பிரபாகரன், கருணாகரன், அஜித், பாண்டி ஆகியோரை கைது செய்துள்ளனர்.