கோவை அருகே காவல்துறை அதிகாரியை அவதூறாக திட்டிய 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
கோயம்புத்தூர் மாவட்டம் சிங்காநல்லூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஜான்சன் என்பவர் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது அருகே உள்ள பெட்ரோல் நிலையத்தில் 3 மர்ம நபர்கள் நின்று ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த காவலர் அவர்களிடம் விசாரணை மேற்கொள்கையில்,
மூவரும் காவல்துறை அதிகாரி என்றும் காவல்துறை அதிகாரி என்றும் பாராமல் தகாத வார்த்தைகளால் திட்டி தீர்த்தனர். இதையடுத்து அவர்கள் மூவரையும் கைது செய்த காவல்துறையினர் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர்.
அதில் மூவரும் கிருஷ்ணகிரி, வேலூர், அரூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த சண்முகம், ராமமூர்த்தி, சின்னதம்பி என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் மூவர் மீதும் அரசு அதிகாரியை பொது இடத்தில் வைத்து திட்டியது. கொலை மிரட்டல் விடுத்தது உள்ளிட்ட வழக்குகளின் கீழ் பல்வேறு வழக்குகள் அவர் மீது பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.