தமிழகத்தில் பல திட்டங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அடிக்கல் நாட்டினார்.
சென்னை கலைவாணர் அரங்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அரசு விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்துகொண்டு ரூ.67,378 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி உரையாற்ற்றினர். அவருடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர். இதில், மத்திய அமைச்சர் அமித்ஷாவிற்கு முதலமைச்சர் விநாயகர் சிலையையும், துணை முதலமைச்சர் நடராஜர் சிலையையும் நினைவுப்பரிசாக வழங்கினர்.
அமித்ஷா அடிக்கல் நாட்டிய திட்டங்கள்:
வல்லூரில் ரூ.900 கோடியில் இந்தியன் ஆயில் நிறுவன பெட்ரோலிய முனையத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அடிக்கல் நாட்டினார் * அமுல்லைவாயிலில் ரூ.1400 கோடியில் Lube Plant அமைக்கும் திட்டத்திற்கும் அடிக்கல்
சென்னை வர்த்தக மையம் ரூ.309 கோடியில் விரிவுபடுத்தும் திட்டத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அடிக்கல் நாட்டினார்
கரூர் மாவட்டம் நஞ்சை புகளூரில் ரூ.406 கோடியில் காவிரி ஆற்றின் குறுக்கே கதவணைத் திட்டத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அடிக்கல் நாட்டினார்
கோவை – அவினாசி சாலையில் ரூ.1,620 கோடியில் உயர்மட்ட சாலைத்திட்டத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அடிக்கல் நாட்டினார்
ரூ.61,843 கோடி மதிப்பீட்டில் சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் 2 ஆம் கட்டத்திற்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா அடிக்கல் நாட்டினார்
திருவள்ளூர் மாவட்டம் கண்ணன்கோட்டை – தேர்வாய்கண்டிகையில் ரூ.380 கோடி மதிப்பீட்டில் புதிய நீர்த்தேக்க திட்டத்தை உள்துறை அமைச்சர் அமித்ஷா மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தார்.