காங்கிரஸ் மூத்த தலைவர் திரு குலாம் நபி ஆசாத்திற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சமூக வலைத்தளமான டுவிட்டரில் காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் வெளியிட்டுள்ள பதிவில் தனக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளதாகவும் மருத்துவர்கள் அறிவுரை படி வீட்டில் தனிமைப் படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருவதாகவும், தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளும்படியும் கேட்டுக் கொண்டுள்ளார்.