Categories
உலக செய்திகள்

காங்கோவில் பரவும் மர்ம நோய்…. பாதிக்கப்படும் இளந்தளிர்கள்…. தகவல் வெளியிட்ட சுகாதாரத்துறை….!!

மர்ம நோயினால் 165 குழந்தைகள் இதுவரை உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

காங்கோ நாட்டில் குவிலு மாகாணத்தில் குங்கு என்ற நகரம் அமைந்துள்ளது. இந்த நகரில் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் மர்ம நோய் ஒன்று பரவி வருகிறது. இதனால் அங்குள்ள 165 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அதிலும் இந்த மர்ம நோய் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் உடலில் மலேரியா நோய்க்கான அறிகுறியும் இரத்தசோகையும்  காணப்பட்டதாக அந்நாட்டின் பிராந்திய சுகாதாரத்துறை தலைவர் ஜீன்-பியர் பாசாக்  தெரிவித்துள்ளார்.

குறிப்பாக ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளே இந்த மர்ம நோய்க்கு அதிக அளவில் பாதிக்கப்படுவதாகவும் கூறியுள்ளார். மேலும் lozo ,Munene,Kinzamba போன்ற கிராமங்களில் தினந்தோறும் நான்கு குழந்தைகள் உயிரிழப்பதாக சுகாதாரத்துறை அதிகாரியான Alain Nzamba தெரிவித்துள்ளார்.

Categories

Tech |