2020 இல் ரிலீஸ் ஆக விஜய் ஆண்டனியின் திரைப்படங்கள் வெளியாகததால் அவர் தனது 25% சம்பளத்தை விட்டுகொடுத்துள்ளார்.
கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, பொதுமக்கள் தங்களது வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கின்றனர். இந்த சூழ்நிலையில் ஒரு சிலதளர்வுகளை கணக்கில் கொண்டு ஆங்காங்கே கடைகள் திறக்கப்படும். இந்நிலையில் திரையரங்கம், திருமண நிகழ்ச்சி, கோவில் திருவிழாக்கள் உள்ளிட்டவற்றிற்கு அதிகக் கூட்டம் கூடும் சூழல் உள்ளது என்பதால்,
அவற்றுக்கு மூன்று மாத காலத்திற்கு தடை நீட்டிக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் சினிமா துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் பாதிக்கப்பட்டுள்ளன. அந்தவகையில், நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் தமிழரசன், அக்னி சிறகுகள், காக்கி ஆகிய மூன்று திரைப்படங்கள் 2020இல் வெளியாக தயாராக இருந்த நிலையில்,
ஊரடங்கு காரணமாக படங்கள் திரையிடப்படாததால், தன்னை நம்பி பணம் போட்ட தயாரிப்பாளர்கள் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காக தனது 25% சம்பளத்தை விட்டுக் கொடுத்துள்ளார். இவரது செயலுக்கு சினிமா துறை வட்டாரங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.