Categories
சினிமா தமிழ் சினிமா

“தளபதியின் இமாலய வெற்றிக்கு வாழ்த்துக்கள்”…. வாரிசு ரிலீசுக்கு விஜய்க்கு வாழ்த்து சொன்ன பார்த்திபன்…. வைரல் பதிவு….!!!!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் தளபதி விஜய். இவர் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன் சார்பில் தில் ராஜு தயாரிக்க தமன் இசை அமைக்கிறார். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்க, அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு படம் ரிலீஸ் ஆகிறது.

இந்நிலையில் பிரபல நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் நடிகர் விஜயின் வாரிசு திரைப்படம் வெற்றி பெறுவதற்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அதில் மூப்பது முட்டாத முப்பது, இனி தோற்பது கிட்டாத ரசிகர்களின் தோப்பது. நண்பர் தளபதி விஜய் அவர்களின் இன்னும் முப்பதும் கடக்கும் வாரிசே இல்லாத இமாலய வெற்றிக்கு வாழ்த்துக்கள் என்று பதிவிட்டுள்ளார். மேலும் இந்த பதிவு தற்போது வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |