திருவனந்தபுர இளம் வயது மேயரை பாராட்டு விதமாக மநீம கட்சியின் தலைவர் கமல் டுவிட் செய்துள்ளார்.
கேரள மாநிலத்தை சேர்ந்தவர் ஆர்யா ராஜேந்திரன்(21). அண்மையில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் திருவனந்தபுரம் மாநகராட்சியை ஆளும் கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கைப்பற்றியது. இந்நிலையில் இங்குள்ள முடவன்முகல் வார்டில் மார்க்சிஸ்ட் வேட்பாளராக 21 வயதான ஆர்யா ராஜேந்திரன் போட்டியிட்டார். இதையடுத்து ஆர்யா இராஜேந்திரன் வெற்றிபெற்று மாநகராட்சி உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவரை மேயராக்க அக்கட்சி முடிவு செய்துள்ளது. இதன்படி இன்று ஆர்யா ராஜேந்திரன் மேயராக பதவி ஏற்றுள்ளார்.
இந்நிலையில் மிக இளம் வயதிலேயே திருவனந்தபுரம் மேயராக பொறுப்பேற்றுள்ள தோழர் ஆர்யா ராஜேந்திரனுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். தமிழகத்திலும் எம் “மாதர் படை” மாற்றத்திற்கு தயாராகி விட்டது என மக்கள் நீதி மைய கட்சியின் தலைவர் கமலஹாசன் டுவிட் செய்துள்ளார். மேலும் விவசாயத்தை மதிக்காத நாடு வீழ்ச்சியடையும். தேவைப்படும் இடத்தில் கருணாநிதி பெயரையும் குறிப்பிடுவேன் என்று கூறியுள்ளார்.