Categories
கிரிக்கெட் விளையாட்டு

“நீங்கள் உண்மையிலேயே ஒரு சிறந்த வீரர்”… கோலியை பாராட்டிய பாக்., முன்னாள்கிரிக்கெட் வீரர்..!!

பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷஹித் அப்ரிடி விராட் கோலிக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். 

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கிடையேயான 2ஆவது  டி 20 போட்டி பஞ்சாப் மொகாலி ஸ்டேடியத்தில் நேற்று இரவு 7 மணிக்கு நடைபெற்றது.  இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பந்து வீச முடிவு செய்தார். அதன் படி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி 20 முடிவில் 5 விக்கெட் இழந்து 149 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக குயிண்டன் டிகாக்  52 (37) ரன்களும் , பவுமாவும் 49 (43) ரன்களும் எடுத்தனர். இந்திய அணியில் அதிகபட்சமாக தீபக் சாஹர் 2 விக்கெட் வீழ்த்தினார்.

இதையடுத்து  களமிறங்கிய இந்திய அணி 19 ஓவரில் 3 விக்கெட் இழந்து 151 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.  இந்திய அணியில் கேப்டன் விராட் கோலி வழக்கம் போல சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணிக்கு வெற்றியை தேடி தந்தார். வெற்றிக்கு முக்கிய காரணமான விராட் கோலி 52 பந்துகளில் 72* ரன்கள் (4 பவுண்டரி, 3 சிக்ஸர் ) அடித்து விளாசினார். ஷிகர் தவான் 40 ரன்கள் எடுத்து வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார்.

Image

இதன் மூலம் இந்தாண்டுக்கான ஒருநாள், டி 20, டெஸ்ட் என 3 வகையான கிரிக்கெட்டிலும் 50 க்கு மேல் சராசரியை பெற்ற வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார். இவரது சாதனையை ஐசிசி ட்விட்டரில் வெளியிட்டு பாராட்டு தெரிவித்தது. அதில் விராட் கோலி 3 வகையான கிரிக்கெட்டிலும் 50க்கும் மேல் சராசரியை வைத்துள்ளார். ஒருநாள் போட்டி 60.31, டெஸ்ட் போட்டி 53.14, டி 20 போட்டி 50.85 என்ற சராசரியை வைத்துள்ளார்.

இந்நிலையில் பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷஹித் அப்ரிடி விராட் கோலிக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். வாழ்த்துக்கள் விராட் கோலி. நீங்கள் உண்மையிலேயே ஒரு சிறந்த வீரர். நீங்கள் தொடர்ந்து பல சாதனைகளை படைக்க வாழ்த்துகிறேன். அத்துடன் உங்கள் ஆட்டத்தின் மூலம்   உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைப்பீர்கள் என நம்புகிறேன் என தெரிவித்தார்.

Categories

Tech |