Categories
கிரிக்கெட் விளையாட்டு

”அனில் கும்ளே_க்கு வாழ்த்துக்கள்” சேவாக்கின் சேட்டைய பாருங்க….!!

முன்னாள் சக கிரிக்கெட் வீரர் அனில் கும்ளேயின் பிறந்த நாளுக்கு வீரேந்திர சேவாக் வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.

இந்தியாவின் முன்னாள் தலைமை பயிற்சியாளரும், முன்னாள் கேப்டனுமான அனில் கும்ளே நேற்று  தன்னுடைய 49ஆவது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இதற்கு வாழ்த்து தெரிவித்து, பிரபலங்களும் ரசிகர்களும் ட்வீட் செய்து வருகின்றனர்.அந்த வகையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வீரேந்தர் சேவாக் அனில் கும்ளேக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.

அதில், “இந்தியாவின் பெரிய போட்டிகளின் வெற்றியாளர்களில் ஒருவரும், அற்புதமான முன்மாதிரியுமான அனில் கும்ளே பாய் உங்களின் இரண்டாம் சதத்தை இழக்கச் செய்ததற்கு மன்னிக்கவும். ஆனால், நீங்கள் நிஜ வாழ்க்கையில் சதத்தை அடிக்க வாழ்த்துகள். சதமடிக்க இன்னும் 51 வருடங்கள்தான் உள்ளது. கமான் அனில்..பிறந்த நாள் வாழ்த்துகள் அனில் கும்ளே பாய்” எனச் சேட்டையுடன் ட்வீட் செய்துள்ளார் வீரேந்தர் சேவாக்.

Categories

Tech |