Categories
தேசிய செய்திகள்

“பாராளுமன்றத்தின் சொத்து மன்மோகன் சிங்” பஞ்சாப் முதல்வர் புகழாரம்..!!

மன்மோகன் சிங், பல ஆண்டு அனுபவம் மற்றும் ஆழமான அறிவினால் பாராளுமன்றத்தின் ஒரு சொத்தாக இருப்பார் என்று முதல்வர் அமரிந்தர் சிங் பாராட்டியுள்ளார். 

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான மன்மோகன் சிங் (வயது 86)  கடந்த 18 ஆண்டுகளாக அசாம் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்டு, எம்.பி. யாக பதவி வகித்து வந்தார். இந்த நிலையில் ஜூன் மாதம் இவரது பதவிக் காலம் முடிவடைந்து விட்டது. பா.ஜ.க எம்.பி மதன்லால் சைனியின் மறைவுக்கு பிறகு ராஜஸ்தானில் காலியான மாநிலங்களவை எம்பி பதவிக்கு கடந்த ஆகஸ்ட் 13-ம் தேதி மன்மோகன் சிங் மனு தாக்கல் செய்திருந்தார்.

Image result for மன்மோகன் சிங்

 

இந்நிலையில் மன்மோகன் சிங் போட்டியின்றி ராஜஸ்தான் மாநிலங்களவை எம்.பி ஆக தேர்வு செய்யப்பட்டார். மன்மோகன் சிங்கிற்கு காங்கிரஸ் மற்றும் ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் உட்பட பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.

Image result for Amarinder Singh

அதன்படி பஞ்சாப் முதலமைச்சர் அமரிந்தர் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். அதில்,  முன்னாள் பிரதமர் சர்தார் மன்மோகன்சிங் ஜி ராஜஸ்தானில் இருந்து மாநிலங்களவைக்கு போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு வாழ்த்துக்கள். உங்கள் பல ஆண்டு அனுபவம் மற்றும் ஆழமான அறிவால், நீங்கள் பாராளுமன்றத்திற்கு ஒரு சொத்தாக இருப்பீர்கள், ஐயா. என்று பாராட்டியுள்ளார்.  

 

Categories

Tech |