இந்திய கிரிக்கெட் அணிக்காக களமிறங்கிய விளையாடிய கம்பீர் ஆட்டநிலை குறித்து பிறந்தநாள் சிறப்பு செய்தி தொகுப்பு .
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் , தற்போதைய மக்களவை உறுப்பினருமான கவுதம் கம்பீருக்கு அக்டோபர் 14 பிறந்த நாள். 38_ஆவது பிறந்த நாளை கொண்டாடும் இவர் 2003_ஆம் ஆண்டு முதல் 2013_ஆம் ஆண்டு வரை 147 ஒருநாள் போட்டிகளில் 143 இன்னிங்ஸ் களமிறங்கி விளையாடிய கம்பீர் , இதில் 11 முறை ஆட்டமிழக்காமல் இருந்துள்ள கம்பீர் 5238 ரன்கள் குவித்துள்ளார். தனிநபர் அதிகபட்சமாக 137 பந்துகளில் 150 ரன் அடித்து அசத்திய கம்பீர் 11 சதங்கள் 34 அரைசதம் விளாசியுள்ளார்.
2004_ஆம் ஆண்டு முதல் 2016_ஆம் ஆண்டு வரை 58 டெஸ்ட் போட்டிகளில் 104 இன்னிங்ஸ் விளையாடியுள்ளார். இதில் 5 முறை ஆட்டமிழக்காமல் இருந்துள்ள கம்பீர் 4151 ரன்கள் குவித்துள்ளார். தனிநபர் அதிகபட்சமாக 380 பந்துகளில் 206 ரன் அடித்து அசத்திய கம்பீர் 9 சதங்கள் 22 அரைசதம் அடித்துள்ளார்.
2007_ஆம் ஆண்டு முதல் 2012_ஆம் ஆண்டு வரை 37 20 ஓவர் போட்டிகளில் களமிறங்கி விளையாடிய கம்பீர் 36 இன்னிங்ஸ்சில் 2 முறை ஆட்டமிழக்காமல் இறுதி வரை களத்தில் ஆடியுள்ளார்.20 ஓவர் போட்டிகளில் 932 ரன்கள் குவித்த கம்பீரின் தனிநபர் அதிகபட்சம் 54 பந்துகளில் 75 ரன் ஆகும். 20 ஓவர் போட்டிகளில் சதம் அடிக்காத கம்பீர் 07 அரைசதம் விளாசியுள்ளார். அக்டோபர் 14-ஆம் தேதி பிறந்தநாள் காணும் கவுதம் கம்பீருக்கு வாழ்த்துக்கள்.