திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலினுக்கு பிரபல இயக்குனர் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெற்றி பெற்றுள்ளது. அதன்படி திமுக தலைவர் ஸ்டாலின் வரும் மே 7ஆம் தேதி முதல்வராக பொறுப்பேற்கிறார். இதை தொடர்ந்து பல்வேறு அரசியல் பிரமுகர்களும், திரை பிரபலங்களும் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனரான ஏ ஆர் முருகதாஸ் மு க ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், மாபெரும் வெற்றி பெற்று தமிழகத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்கவிருக்கும் மாண்புமிகு திரு. முக ஸ்டாலின் அவர்களுக்கும், எங்கள் திரைத்துறையில் இருந்து சட்டமன்ற உறுப்பினராக பொறுப்பேற்கவிருக்கும் திரு. உதயநிதிஸ்டாலின் அவர்களுக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
மாபெரும் வெற்றி பெற்று
தமிழகத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்கவிருக்கும் மாண்புமிகு திரு. @mkstalin அவர்களுக்கும், எங்கள் திரைத்துறையில் இருந்து சட்டமன்ற உறுப்பினராக பொறுப்பேற்கவிருக்கும் திரு. @Udhaystalin அவர்களுக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.😊💐💐💐— A.R.Murugadoss (@ARMurugadoss) May 4, 2021