மழையால் ஏற்பட்ட பள்ளத்தை சரி செய்த ஆட்டோ ஓட்டுனர்களை கலெக்டர் பாராட்டியுள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த 10 தினங்களுக்கும் அதிகமாக தொடர்ந்து மழை பெய்து வருகின்றது. இதன் காரணத்தினால் அங்கங்கே மழைநீர் தேங்கி நிற்கின்றது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்நிலையில் தொடர் கனமழையினால் சாலையில் ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டு விபத்துக்கள் ஏற்படுகின்றது.
இது பற்றி தகவல் அறிந்த நகராட்சி நிர்வாகம் முக்கிய சாலைகளை சீர் செய்து வருகின்றது. இதனை அடுத்து ஆற்காடு பைபாஸ் ரோடு பகுதியில் மழையால் ஏற்பட்டிருக்கும் பள்ளங்களை ஆட்டோ ஓட்டுநர்கள் பாபு, பாஸ்கர் மற்றும் வெங்கடேஷ் ஆகியோர் கற்களைக் கொண்டு சரி செய்துள்ளனர். அப்போது அவ்வழியாக சென்ற மாவட்ட கலெக்டர் காரிலிருந்து இறங்கி பார்வையிட்டு ஆட்டோ ஓட்டுனர்களை பாராட்டியுள்ளார்.