பிக்பாஸ் பிரபலம் மகத்திற்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது.
முன்னணி நடிகர் அஜித் நடிப்பில் வெளியான ‘மங்காத்தா’ திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகர் மகத். இதையடுத்து ஜில்லா, வந்தா ராஜாவா தான் வருவேன் உள்ளிட்ட படங்களில் நடித்து பின் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் பங்கேற்றதன் மூலம் மிகவும் பிரபலமானார்.
இதையடுத்து பிராச்சி மிஸ்ரா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட மகத் கடந்த சில மாதங்களுக்கு முன் தன் மனைவி கர்ப்பமாக இருப்பதாக அறிவித்திருந்தார். மேலும் தனது வீட்டில் நடந்த வளைகாப்பு விழாவின் போது எடுக்கப்பட்ட வீடியோவையும் அவர் தன் சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டு இருந்தார்.
இந்நிலையில் பிரபல நடிகர் மகத் மற்றும் பிராச்சி தம்பதியினருக்கு நேற்று அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. இச்செய்தியை மகிழ்ச்சியுடன் மகத் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்துள்ளார். மேலும் ரசிகர்கள் பலரும் மகத்திற்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
https://www.instagram.com/p/CP0srMQjL-t/?utm_medium=copy_link