பிகாரில் ஐக்கிய ஜனதா தள, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடைபெற்றுவருகிறது. முதலமைச்சர் நிதிஷ்குமாரின் பதவிக்காலம் நவம்பர் 29ஆம் தேதி முடிவடைய உள்ள நிலையில், 243 இடங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் மூன்று கட்டங்களாக நடைபெற்றன. இதையடுத்து, அக்டோபர் 28, நவம்பர் 3, 7 ஆகிய தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்நிலையில், இன்று முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.
ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் கூட்டணியே ஆட்சி அமைக்கவுள்ளதாக தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளில் தெரிவிக்கப்பட்ட நிலையில், நாட்டின் இளம் வயதில் முதலமைச்சராகி தேஜஸ்வி யாதவ் வரலாறு படைப்பாரா எனக் கேள்வி எழுந்துள்ளது.ஐக்கிய ஜனதா தளம், பாஜக ஆகிய கட்சிகள் அடங்கிய கூட்டணி ஒரு முனையிலும் ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள் மற்றொரு முனையிலும் கூட்டணி அமைத்து போட்டியிட்டன.
காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்கு எண்ணிக்கை முடிவுகள் தற்போது வெளியாகிக்கொண்டு இருக்கின்றது. தற்போதைய நிலையில்:
காங்கிரஸ் இடம்பெற்றுள்ள ஆர்.ஜே.டி கூட்டணி – 47
பாஜக இடம்பெற்றுள்ள ஜே.டி.யூ கூட்டணி – 40