ஒருமாத காலத்திற்கு விவாதங்களில் பங்கேற்க காங்கிரஸ் கட்சிக்கு தடை விதிக்கப்பட்டுள்ள்ளது .
நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்ததை அடுத்து மற்ற தலைவர்களை போல் தோல்விக்கு பொறுப்பேற்று பதவி விலகும் முடிவில் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி உறுதியாக இருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகி வந்தன.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பதவி விலக வேண்டாம் என்று ரஜினி, ஸ்டாலின் உள்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் பிரபலங்கள் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி பதவி விலகுவது பெரும் விவாதப் பொருளாக இந்தியாவில் மாறியுள்ளது.
ஆகையால் செய்தி டிவிகளில் விவாதங்களில் பங்கேற்க வேண்டாம் என்று காங்கிரஸ் கட்சி முடிவு செய்து உள்ளது. இதனை அடுத்து விவாதங்களில் பங்கேற்க ஒருமாதகாலம் காங்கிரஸ் கட்சிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சி செய்தி தொடர்பாளர் ரந்தீப் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.