Categories
தேசிய செய்திகள்

“காங்கிரஸ் வேட்பாளர் மீது கற்பழிப்பு புகார்” பாதிக்கப்பட்ட இளம்பெண் மாயம்…!!

கோவா மாநில பனாஜி சட்டசபை தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் மீது கற்பழிப்பு புகார் கூறிய இளம்பெண் மறுவாழ்வு மையத்தில் இருந்து காணாமல் போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கோவா மாநிலத்தின் பனாஜி சட்டசபை தொகுதிக்கான வாக்கு பதிவு வருகின்ற 19_ஆம் தேதி நடைபெறுகின்றது.  இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியின்  சார்பில் வேட்பாளராக அடானேசியோ மோன்செரட்டே போட்டியிடுகிறார்.  முன்னாள் அமைச்சராக இருந்த இவர் மீது கடந்த 2016_ஆம் ஆண்டு மே மாதத்தில் இளம்பெண் ஒருவர் கற்பழிப்பு புகார் கொடுத்திருந்தார்.

பாதிக்கப்பட்ட பெண் 17 வயது பெண்ணின் வழக்கில் அடானேசியோவுக்கு எதிராக வடக்கு கோவா மாவட்ட நீதிமன்றத்தில் போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இதையடுத்து அந்த பெண்ணும் மறுவாழ்வு மையம் ஒன்றில் தங்கி ஆடை வடிவமைப்பு பற்றி படித்து வந்தார். தற்போது அப்பெண் தீடிரென காணாமல் போயுள்ளார். இது குறித்து கடந்த ஏப்ரல் 28ந்தேதி அந்த இளம்பெண் படித்து வந்த கான்வென்டின் அதிகாரிகள்  போலீசில் புகார் அளித்தனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |