உண்மை பேசுபவர்கள் துன்புறுத்துவது அரசின் கோழைத்தனம் என்று ப.சிதம்பரத்திற்கு எதிரான நடவடிக்கைக்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.
ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்தின் 305 கோடி அன்னிய முதலீட்டில் முறைகேடு செய்த வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டிருந்தார். இதில் பொருளாதார குற்றங்கள் புரிந்தவர்கள் எளிதில் முன்ஜாமீன் பெற்றால் அந்த வழக்கு பலவீனப்பட்டு விடும் என்று டெல்லி உயர்நீதிமன்றம் சிதம்பரத்துக்கு முன் ஜாமின் வழங்க மறுத்தது இந்த நிலையில் ப.சிதம்பரம் முன்ஜாமீன் இரத்து_க்கு எதிராக மேல்முறையீடு செய்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
மேலும் டெல்லி உயர்நீதிமன்ற தீர்ப்பு வந்ததும் ப.சிதம்பரம் வீட்டிற்கு CBI மற்றும் அமலாக்கத்துறையினர் சென்றனர். அவரை கைது செய்ய சென்றுள்ளதாகவே பார்க்கப்பட்ட இந்த நடவடிக்கையில் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையினர் சற்றும் பின்வாங்க வில்லை ப.சிதம்பரம் வீட்டில் இல்லை என்று தெரிந்ததும் அவரின் வீட்டில் நோட்டீஸ் ஒட்டப்பட்டு விசாரணைக்கு அழைக்க பட்டிருந்தது. மேலும் கடந்த 14 மணி நேரத்தில் 4 முறை ப.சிதம்பரம் வீட்டிற்கு சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையினர் விரைந்தனர்.
மேலும் இந்த வழக்கு மேல்முறையீடு விசாரணையை அவசர வழக்காக விசாரிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்த நிலையில் காங்கிரஸ் கட்சி ப.சிதம்பரத்தின் மீதான நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. அக்கட்சியின் அதிகாரபூர்வ ட்வீட்_டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள கருத்தில் , உண்மை பேசுபவர்கள் துன்புறுத்துவது அரசின் கோழைத்தனத்தை உறுதிப்படுத்துவதாக உள்ளது. மதிப்பிற்குரிய தலைவரான ப.சிதம்பரம் நாட்டிற்காக அர்ப்பணிப்புடன் செயலாற்றி இருக்கின்றார் என்று கருத்து தெரிவித்துள்ளது.
A govt that persecutes its citizens for speaking truth to power is only reiterating its own cowardly nature. @PChidambaram_IN is an extremely qualified & respected leader, he has served this nation with dedication & humility. We stand by his quest for truth no matter what.
— Congress (@INCIndia) August 21, 2019