கர்நாடகாவில் கட்சி கொறடா உத்தரவை மீறிய சட்டமன்ற உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டுமென்று சபாநாயகரிடம் காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
கர்நாடகாவில் நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசுக்கு ஆதரவாக 99 உறுப்பினர் ஆதரவாகவும் , 105 உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்தனர். இதனால் நம்பிக்கை வாக்கெடுப்பில் காங்கிரஸ் + மதசார்பற்ற ஜனதாதள கூட்டணி அரசு கவிழ்ந்து குமாரசாமி முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.
புதிய அரசு அமைக்கும் பணியில் கர்நாடக பாஜக தலைவர்கள் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டு இருக்கின்றனர். இந்நிலையில் , காங்கிரஸ் கட்சி தலைவர் சித்தராமையா தலைமையில் அக்கட்சி நிர்வாகிகள் சபாநாயகரை நேரில் சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தனர். அதில் கட்சி கொறடா உத்தரவை மீறிய MLA_க்களை சட்டப்படி தகுதி நீக்கம் செய்ய வேண்டுமென்று, அதற்கான ஆவணங்களை சபாநாயகரிடம் வழங்கி கோரிக்கை விடுத்தனர்.