அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆனதே தற்பொழுது வெற்றி கூட்டணி ஒன்றை அமைத்துள்ளது இந்த வெற்றிக் கூட்டணியை தோற்கடிப்பதற்காக காங்கிரஸ் மற்றும் திமுக கட்சியினர் அவதூறு பரப்பி வருகின்றனர் என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ஜி கே வாசன் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளார்
வருகின்ற ஏப்ரல் 18ம் தேதி நடக்கவிருக்கும் மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத் தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியானது அதிமுகவுடன் கூட்டணியில் தற்போது இணைந்துள்ளது மேலும் இந்த கூட்டணியானது ஒரு வெற்றி கூட்டணி என்றும் இந்தக் கூட்டணியை தோற்கடிப்பதற்காக காங்கிரஸ் மற்றும் திமுக கட்சிகள் அவதூறு பரப்பி வருவதாகவும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ஜி கே வாசன் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளார்.
மக்கள் விரும்பும் வெற்றி கூட்டணியை அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் உருவாக்கியுள்ளது இந்த வெற்றி கூட்டணியை தேர்தலில் வெற்றி பெறாமல் தடுப்பதற்காக காங்கிரஸ் மற்றும் திராவிட முன்னேற்றக் கழகத்தினர் அவதூறு பரப்பி வருகின்றனர் இது மிகவும் கண்டனத்திற்கு உரியது என்றும் இந்த அவதூறுகளால் இந்த வெற்றி கூட்டணியானது தோல்வி அடையாது என்றும் கண்டிப்பாக நாடாளுமன்றத் தேர்தலில் இந்த வெற்றிக் கூட்டணி மாபெரும் வெற்றியைப் பெறும் என்றும் அவர் தெரிவித்தார்
மேலும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார் கொடுக்கப்பட்ட தொகுதிகளில் நன்கு பணியாற்றி வெற்றி பெறுவதற்கான வழி வகையை தமிழ் மாநில காங்கிரஸ் செய்யும் என்றும் தொடர்ந்து அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்திற்கு தேர்தல் பிரச்சார பயணத்தில் அவர்களுக்கு பிரச்சாரம் தமிழகம் முழுவதும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி செய்யும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்