Categories
தேசிய செய்திகள்

கொரோனா முன்னெச்சரிக்கை : கைகளை சுத்தமாக கழுவுவது எப்படி?… வீடியோ வெளியிட்ட பிரியங்கா காந்தி!

காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைகளை சுத்தமாக கழுவுவது தொடர்பாக ட்விட்டரில் வீடியோ வெளியிட்டுள்ளார்.

இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 315 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 5 பேர் உயிரிழந்துள்ளனர். நாளுக்குநாள் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வரும் நிலையில் மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இதனிடையே மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் என்று பிரபலங்கள் பலரும் தங்களது கைகளை எப்படி கழுவ வேண்டும் என்று வீடியோ வெளியிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

அந்தவகையில் காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தங்களது கைகளை எப்படி சுத்தமாக கழுவ வேண்டும் என்று ட்விட்டரில் வீடியோ வெளியிட்டுள்ளார். ஒரு நிமிட அளவிற்கு ஓடும் அந்த வீடியோவில், கைகளை கிருமி நாசினியை கொண்டு கழுவும் முறை தொடர்பாக செயல் விளக்கமளித்துள்ளார்.

Image result for क्या आप छोटी-छोटी सावधानियां बरत रहे हैं? आपकी ये सावधानियां कोरोना वायरस के खिलाफ लड़ाई को मजबूत करेंगी।

மேலும் அவர் பதிவிட்டதாவது, நீங்கள் சிறிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கிறீர்களா? உங்கள் முன்னெச்சரிக்கைகள் கொரோனா வைரஸுக்கு எதிரான போராட்டத்தை பலப்படுத்தும் என்று குறிப்பிட்டார். தொடர்ந்து,  குடிமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை  வாழ்க்கையின் ஒரு பகுதியாக ஆக்கி, அதைப் பற்றிய விழிப்புணர்வைப் பரப்புங்கள் என்றும் பிரியங்கா காந்தி கூறியுள்ளார்.

Categories

Tech |