Categories
அரசியல் தேசிய செய்திகள்

கலக்கத்தில் காங்கிரஸ்…. ”ஏமாற்றினால் தப்ப முடியாது”….. அதிரடி காட்டிய மோடி….!!

 கர்நாடகாவில் நிலையான ஆட்சிக்காக மக்கள் பாஜகவை தேர்ந்தெடுத்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி ஜார்க்கண்ட் மாநிலத் தேர்தல் பரப்புரையின்போது தெரிவித்துள்ளார்.

ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவைக்கான வாக்குப்பதிவு ஐந்து கட்டமாக நடைபெறுகிறது. மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு டிசம்பர் 12ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், ஹசரிபாக் மாவட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.

நேற்று வெளியான கர்நாடக சட்டப்பேரவை இடைத்தேர்தல் குறித்து பேசிய அவர், “கர்நாடக மக்களை ஏமாற்றிவிட்டு தப்பித்து விட முடியாது என்பதை காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தள கட்சிகளுக்கு அம்மாநில மக்கள் நிரூபித்துள்ளனர்.

மக்களின் முடிவுக்கு எதிராக செல்ல விரும்பும் கட்சிகளுக்கு அவர்கள் பாடம் புகட்டியுள்ளனர். சரியான தண்டனையை மக்கள் வழங்கியுள்ளனர். பாஜக ஆட்சியமைக்கவே மக்கள் விரும்பினர், ஆனால், காங்கிரஸ் அதனை பறித்துக்கொண்டது. இடைத்தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவு அளித்ததன் மூலம் காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் தண்டனை வழங்கியுள்ளனர். நிலையான ஆட்சிக்காக பாஜகவை தேர்ந்தெடுத்துள்ள மக்களுக்கு நன்றி” என்றார்.

Categories

Tech |