Categories
தேசிய செய்திகள்

மீண்டும் காங்கிரஸ் தலைவராகிறார் ராகுல் காந்தி..!!

வருகின்ற ஏப்ரல் 15-ஆம்தேதிக்குள் ராகுல்காந்தி மீண்டும் காங்கிரஸ் தலைவராக தேர்வு செய்யப்படுவார் என்று கட்சிக்குள் பேசப்படுகிறது.

மக்களவை தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியடைந்ததன் காரணமாக காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ராகுல்காந்தி தானாக முன் வந்து ராஜினாமா செய்தார். ராகுலை அக்கட்சியினர் சமாதானப்படுத்துவதற்கு எவ்வளவோ முயற்சி செய்தனர். ஆனாலும் முடிவில் பின் வாங்காமல் மீண்டும் பதவியை ஏற்க மாட்டேன் என மறுத்து விட்டார்.

இதையடுத்து சோனியாகாந்தி, கட்சியின் இடைக்கால தலைவராக தேர்வு செயல்படுவார் என அறிவிக்கப்பட்டது. அதன்படி அவர் செயல்பட்டு வந்தார். ஆனால் அடிக்கடி அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போவதால் கட்சி பணிகளை சரியாக கவனிக்க முடியாமல் தவித்து வருகிறார்.

Image result for Congress leader Rahul Gandhi

எனவே சீக்கிரத்தில் மீண்டும் புதிய தலைவரை தேர்வு செய்ய வேண்டிய கட்டாயம் காங்கிரசுக்கு ஏற்பட்டுள்ளது. அக்கட்சியில் வேறு யாறும் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பு இருக்கிறதா என்ற கேள்விக்கு மத்தியில், ராகுல் மீண்டும் காங். தலைவராக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பதையே பெரும்பாலான தலைவர்கள் விரும்புகிறார்கள்.

ஏனென்றால் அவரை மட்டுமே மக்கள் ஏற்றுக்கொள்வார்களே, தவிர மற்றவர்களால் கட்சிக்கு செல்வாக்கு பெற முடியாது என்று கருதுகின்றனர். இதனால் மீண்டும் ராகுல்காந்தியை தலைவராக்க வேண்டும் என்று குரல் வலுவாக எழுந்துள்ளது. குறிப்பாக சொல்லவேண்டும் என்றால், ராஜஸ்தான் முதல்வர் அசோக்கெலாட் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் ராகுல் தலைவர் பதவிக்கு வரவேண்டும் என்று தொடர்ந்து அழைப்பு விடுத்து கொண்டே வருகின்றனர்.

Image result for Congress leader Rahul Gandhi

இதற்கு ராகுலும் சம்மதித்து விட்டதாக தெரிகிறது. ஆகவே ராகுலை முறைப்படி மீண்டும் தலைவராக தேர்வு செய்ய உள்ளனர். காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் மாநாடு அடுத்த மாதத்தின்  இறுதியிலோ அல்லது ஏப்ரல் முதல் வாரத்திலோ நடத்தப்பட உள்ளது. அந்த மாநாட்டில் புதிய தலைவரை தேர்வு செய்ய இருக்கிறார்கள்.

எனவே வருகின்ற ஏப்ரல் 15-ஆம் தேதிக்குள் ராகுல்காந்தி தலைவராக தேர்வு செய்யப்பட்டு விடுவார் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Categories

Tech |