காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தேர்தல் பிரச்சாரத்திற்காக இன்று தமிழகம் வருகிறார்.
நாகர்கோவிலில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேட்பதற்காக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று தமிழகம் வருகிறார்.இந்த பொதுக்கூட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க ஸ்டாலின், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்டோர் பங்கேற்று உரையாற்றுகிறார்கள்.மேலும் மார்க்சிஸ்ட்கட்சி , இந்திய கம்யூனிஸ்ட் கட்சி , விடுதலைச் சிறுத்தைகள்கட்சி , மனிதநேய மக்கள் கட்சி, முஸ்லிம் லீக் கட்சி , கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி, இந்திய ஜனநாயகக் கட்சி ஆகிய கட்சிகளின் தலைவர்களும் இந்த கூட்டத்தில் பங்கேற்கின்றனர்.
பொதுக்கூட்டத்தில் பங்கேற்கும் முன்னதாக, இன்று சென்னை வரும் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் நடைபெறும் நிகழ்ச்சியில் மாணவிகளுடன் கலந்துரையாடுகிறார். ராகுல் வருகையையொட்டி சென்னையிலும், நாகர்கோவிலிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.