மக்களவை தேர்தலில் தோல்வியடைந்ததால் ராகுல் காந்தி தனது பதவியை ராஜினாமா செய்ய இருக்கிறார் என்ற தகவல் காங்கிரஸ் கட்சி தொண்டர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய மக்களவை ஏப்ரல் 11_ஆம் தேதி தொடங்கி மே 19_ஆம் தேர்தல் வரை 7 கட்டமாக நடந்து முடிந் நேற்று முன்தினம் வாக்கு எண்ணிக்கை மற்றும் முடிவு அறிவிக்கப்பட்டது. இதில் தேசியளவில் பாஜக கூட்டணி 350 இடங்களை கைப்பற்றி தனி மெஜாரிட்டியுடன் தனது ஆட்சியை தக்க வைத்தது. கடந்த பாராளுமன்ற தேர்தலில் 44 மக்களவை தொகுதிகளில் வென்ற காங்கிரஸ் இந்த முறை 52 தொகுதிகளை மட்டுமே பெற்றுள்ளது.
பல மாநிலங்களில் ஒரு இடங்களை கூட வெற்றி பெறாத காங்கிரஸ் தனது பாரம்பரிய தொகுதியான அமேதி தொகுதியையும் பிஜேபி_யிடம் விட்டுக்கொடுத்தது. அங்கே அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தோல்வி அடைந்தது காங்கிரஸ் நிர்வாகிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தேர்தலின் வெற்றிக்காக காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளர் ப்ரியங்கா காந்தி தீவிர பிரசாரம் செய்தது ஈடுபடவில்லை. காங்கிரஸ் கட்சியின் படு தோல்வியை அடுத்து அக்காங்கிரஸ் கட்சியின் உயர் அதிகாரம் கொண்ட காரிய கமிட்டி கூட்டம் இன்று டெல்லியில் நடைபெறுகின்றது.
இந்த கூட்டத்தில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, பொது செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்கின்றனர். இதில் காங்கிரஸ் கட்சியின் தோல்வி குறித்து விவாதிக்கப்பட இருக்கின்றது. மேலும் காங்கிரஸ் கட்சியின் இந்த மோசமான தோல்வியால் பல்வேறு மாநில நிர்வாகிகள் தங்களின் பொறுப்பை ராஜினாமா செய்து வருகின்றனர்.
உத்தரபிரதேச மாநில தொலைவியையடுத்து அம்மாநில தலைவரும், நடிகருமான ராஜ் பாப்பார் தன்னுடைய ராஜினாமா கடிதத்தை ராகுல் காந்திக்கு நேற்று அனுப்பினார்.
இதேபோல் ஒடிசா மாநில சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்ற தோல்விக்கு பொறுப்பேற்ற அம்மாநில தலைவர் நிரஞ்சன் பட்நாயக் , கர்நாடக மாநில தோல்விக்கு பொறுப்பேற்ற அம்மாநில பிரசார குழு தலைவர் எச்.கே.பாட்டீல் என பல மாநில காங்கிரஸ் தலைவர்களும், பொறுப்பாளர்களும் தங்கள் பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாக
மாநில தலைவர்களின் ராஜினாமாவை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் ராகுல் காந்தியும் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. இதை முறைப்படி அவர் காரிய கமிட்டி கூட்டத்தில் அறிவிப்பார் என பரபரப்பான தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. எனினும் இதை காரிய கமிட்டி ஏற்குமா? என்பது இன்று தான் தெரியும்.
முன்னதாக, நாடாளுமன்ற தேர்தலில் கட்சியின் படுதோல்விக்கு தானே பொறுப்பு ஏற்பதாக ராகுல் காந்தி கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மலையாளத்தில் நன்றி தெரிவித்த ராகுல் காந்தி
அமேதி தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தோல்வி அடைந்தாலும், கேரள மாநிலம் வயநாட்டில் அவர் மிகப்பெரிய ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்நிலையில் அவர் கேரள மக்களுக்கு மலையாள மொழியில் நன்றி தெரிவித்தார்.
இது குறித்து அவர் தன்னுடைய டுவிட்டர் செய்தியில், “தன்னை வெற்றி பெற செய்த வயநாடு தொகுதி வாக்காளர்களுக்கும், காங்கிரஸ் கட்சி அதிக இடங்களை பெற உதவிய கேரள மக்களுக்கும் நன்றி” என குறிப்பிட்டு உள்ளார்.