திமுகவுடன் முரண்படவில்லை என காங்கிரஸ் எம்பி திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்..
பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து சென்னை நகரில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு பின்னர் காங்கிரஸ் எம்பி திருநாவுக்கரசர் செய்தியாளர்களிடம் பேசினார்.. அப்போது அவர் கூறியதாவது,
எதிர்க்கட்சி என்கிற முறையில் காங்கிரஸ் கட்சி அரசாங்கம் எடுக்கிற சரியான நடவடிக்கைக்கு துணை நிற்கும்.. சரியான நடவடிக்கையை எப்படி எதிர்க்க முடியும். மத்திய அரசு, மாநில அரசு முறையான சரியான நடவடிக்கைகளை எதிர்க்கட்சி என்கிற காரணத்தினால் எதிர்க்க மாட்டோம் அப்படிங்குற கருத்தில் ஸ்டாலின் சொல்லியிருக்கிறார்.. அது காங்கிரஸுக்கு விரோதமான கருத்து இல்லை. அவர் சொல்லவுமில்லை.. அதனால் காங்கிரஸ், திமுக உறவில் விரிசல் பிளவு இல்லை என்று அவர் கூறினார்..