காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கை பொய்களையும் , பாசாங்குதனத்தையும் கொண்டது என்று பிரதமர் மோடி விமர்சித்துள்ளார்.
மக்களவை தேர்தல் வருகின்ற 11_ஆம் தேதி முதல் 7 கட்டமாக நடைபெறுகின்றது.இதையடுத்து அரசியல் கட்சிகள் தொடர்ந்து தீவிர பிரசாரத்தை முன்னெடுத்து வருகின்றனர். இதையடுத்து அருணாச்சல பிரதேச மாநிலத்தின் கிழக்கு சைங் மாவட்டத்தில் இருக்கும் பசிகாட் என்ற இடத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறுகையில் , வடகிழக்கு மாநிலங்களுக்கு காங்கிரஸ் கட்சியின் ஆட்சியில் உரிய முக்கியத்துவம் அளிக்கவில்லை.வாஜ்பாய் ஆட்சி காலத்தில் தான் வடகிழக்கு மாநிலங்களுக் கென்று தனி அமைச்சகம் அமைக்கப்பட்டுள்ளது என்ற மோடி காங்கிரஸ் கட்சி வெளியிட்ட தேர்தல் அறிக்கை குறித்து பேசும் போது காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை பொய்களையும் பாசாங்குதனத்தையும் கொண்டது. காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்களை டெபாசிட் இழக்கச்செய்வதை நீங்கள் உறுதி செய்ய வேண்டும் என்று பேசினார்.