திருநெல்வேலி மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியினர் கொரோனா கவச உடைகளை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தினம்தோறும் அதிகரித்துக்கொண்டே செல்லும் பெட்ரோல் டீசல் விலையால் பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில் நெல்லை மாவட்டம் வண்ணாரப்பேட்டை பகுதியில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க கோரியும், அதை தினந்தோறும் உயர்த்தும் மத்திய அரசை கண்டித்தும் பல கோஷங்களை எழுப்பி உள்ளனர்.
இதனையடுத்து நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கரபாண்டியன் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கியுள்ளார். மேலும் முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தனார் மற்றும் கட்சி உறுப்பினர்கள் பலரும் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில் மாவட்டம் முழுவதும் 7 இடங்களில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தற்போது கொரோனா காலம் என்பதால் ஆர்ப்பாட்டத்தில் கொரோனா தடுப்பு கவச உடையை அணிந்தும், சமூக இடைவெளியை பின்பற்றியும் கலந்து கொண்டுள்ளனர்.