காங்கிரஸ் தோல்வி அடைந்ததற்கு ராகுல் காந்தியின் பிரச்சாரம் மற்றும் குடும்ப அரசியல் காரணம் என்று காங்கிரஸ் கட்சி தொண்டர்களே விமர்சனம் செய்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
நடைபெற்று முடிந்த பாராளுமன்ற தேர்தலில் பிஜேபி கட்சியானது பெரும்பான்மையான தொகுதிகளில் ஏராளமான வாக்கு வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி பெற்று காங்கிரஸ் கட்சியை படுதோல்வியடைய செய்தது . இந்த தோல்வி காரணமாக காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தியை அக்கட்சி தொண்டர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர் தோல்விக்கான காரணங்கள் குறித்து அவர்கள் கூறியதாவது ,
தேர்தலுக்கு முந்தைய காலங்களில் பல்வேறு இடங்களில் மோடிக்கு எதிராக ராகுல் காந்தி கடுமையான விமர்சனங்களுடன் பிரச்சாரம் செய்து வந்தார் .குறிப்பாக ராஃபிள் விமான ஊழல் மற்றும் பிரதமர் மோடி காவலாளி அல்ல அவர் ஓர் திருடன் என்று பிரச்சாரத்தில் பேசியது தற்பொழுது காங்கிரஸ் கட்சிக்கு எதிர்மறையை ஏற்படுத்தியுள்ளது என்று குற்றம் சாட்டியுள்ளனர் .
மேலும் புல்வாமா தாக்குதலை காங்கிரஸ் கட்சி சரியாக கையாளாததும் ,அது குறித்து நடந்த நிகழ்வுகளில் ஈடுபடாமல் இருந்ததுமே தோல்விக்கு முக்கியகாரணம் என்றும் , தற்பொழுது உள்ள இளம் தலைமுறையினர் குடும்ப அரசியலை விரும்புவதில்லை காங்கிரஸ் அதை கையாண்டதால் தான் தோல்வி அடைந்துள்ளது என்று அக்கட்சி நிர்வாகிகளே குற்றம் சாட்டி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.