காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட உள்ளதாக திக்விஜய் சிங் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார்.
அகில இந்திய காங்கிரஸ் தலைவரை தேர்வு செய்யும் பணி என்பது தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் என்பது நாளை கடைசி நாளாகும். இதுவரை யாரும் தங்களது வேட்பு மனுவை டெல்லியில் இருக்கக்கூடிய அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் தாக்கல் செய்யவில்லை. முன்னதாக இந்த தலைவர் தேர்தலில் சசி தரூர் தான் போட்டியிட இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். மூத்த தலைவர்கள் யாரும் போட்டியிட விரும்பவில்லை.
அதே நேரத்தில் ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட் தேர்தலில் போட்டியிட இருப்பதாகவும், அவருக்கு சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோரின் ஆதரவு கிடைத்திருப்பதாகவும், தகவல் வெளியாகி இருக்கக்கூடிய நிலையில் கட்சியில் ஒருவருக்கு ஒரு பதவி என்ற கொள்கையை பின்பற்றுவதற்கு அசோக் கெலாட் மறுப்பு தெரிவித்தார்.
மேலும் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய மறுத்த நிலையில், அந்த விவகாரம் சோனியா காந்தியை பெரும் இன்னலுக்கு உள்ளாக்கியது. இதன் அடிப்படையில் தான் இன்று மாலை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை அசோக்கெலாட் நேரடியாக சந்தித்து பேச இருக்கிறார். இப்படிப்பட்ட சூழ்நிலையில் சோனியா காந்தியும் அடுத்த தேர்வாக யாராக இருக்கலாம் என தேர்தலில் போட்டியிடுவதற்கு எதிர்பார்த்த நிலையில் மணிசங்கர், கமல்நாத் உள்ளிட்ட பல்வேறு பெயர்கள் அடிபட்ட நிலையில் தற்போது மூத்த தலைவர் திக் விஜய் சிங் காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தலில் போட்டியிடுவதாக இருப்பதாக தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்.
டெல்லியில் இருக்கக்கூடிய அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு இன்று வந்த திக்விஜய் சிங் இந்த தேர்தலில் போட்டியிட தான் விரும்புவதாகவும், அதற்கான வேட்பு மனுவை தான் தற்போது வாங்க தலைமை அலுவலகத்திற்கு வந்திருப்பதாக செய்தியாளர்களும் தெரிவித்தார். தனது வேட்பு மனுவை நாளை அவர் தாக்கல் செய்ய இருக்கிறார். அவரை தொடர்ந்து சசிதருர் உள்ளிட்டோர் வேட்பு மனுவை நாளை தாக்கல் செய்ய இருக்கிறார்கள். இதனால் இந்த தேர்தலில் தற்போது திருப்பம் ஏற்பட்டுள்ளது. இருந்தாலும் அசோக் கெலாட் இந்த தேர்தலில் போட்டியிடுவாரா ? என்ற ஒரு எதிர்பார்ப்பு இருக்கின்றது. இதற்கான தீர்வு என்பது இன்று மாலை அசோக் கெலாட் சோனியா காந்தியைசதித்த பிறகு முழுமையாக தெரியவரும்.