காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட சசிதரூர் வேட்பு மனு தாக்கல் செய்திருக்கிறார்.
காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை கேரளாவை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் சசிதரூர் சற்று நேரத்துக்கு முன்பு தாக்கல் செய்திருக்கிறார். காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் தான் அவருடைய வேட்பு மனு தாக்கல் என்பது செய்யப்பட்டிருக்கிறது. ஏராளமான தொண்டர்கள் தற்போது கூடியிருக்கிறார்கள்.
இன்னும் சில மணி நேரங்களில் காங்கிரஸ் கட்சியின் மிக மூத்த தலைவராகவும், மாநிலங்களவை தலைவருமாக இருக்கக்கூடிய மல்லிகார்ஜுனா கார்கே தனது வேட்புமனுவை தாக்கல் செய்ய இருக்கிறார். அவருக்கு ஆறுதல் தெரிவித்து மூத்த தலைவர்கள் பலரும் காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் கூடி இருப்பதை பார்க்க முடியும். மல்லிகார்ஜுனா கார்கேவுக்கு ஆதரவு தெரிவிப்பதற்காகத்தான் ஏராளமான காங்கிரஸ் கட்சியின் தொண்டர்கள், காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் காங்கிரஸ் கட்சியின் தலைமையாகத்தில் கூடியிருக்கிறார்கள்.
சசிதரூர் மேளதாள வாத்தியங்கள் முழங்க, மாலை அணிந்தபடி வந்து தன்னுடைய வேட்புமனுவை தாக்கல் செய்திருக்கிறார். முன்னதாக மல்லிகார்ஜுனா கார்கே மட்டும் இந்த தேர்தலில் போட்டியிட்டு போட்டியின்றி தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நிச்சயமாக நான் இந்த தேர்தலில் போட்டியிடுவேன்.
எதிலும் பின்வாங்க மாட்டேன் என தெரிவித்த சசிதரூர் மேளதாள, வாத்தியங்கள் முழக்க தனது ஆதரவாளர்கள் புடைசூழ வந்து வேட்பு மனுவை தாக்க செய்திருக்கிறார். இன்னும் ஒரு சில மணி நேரங்களில் மல்லிகார்ஜுனா கார்கேவும் அதிகாரப்பூர்வமாக தன்னுடைய வேட்பு மனுவை தாக்கல் செய்கிறார். அவருக்கு ஆதரவாக, வேட்புமனுவை முன்மொழிவதற்காக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள்,
நாடாளுமன்ற உறுப்பினர்கள், அனைவருமே தற்போது கூடி இருக்கிறார்கள். சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோரின் ஆதரவு மல்லிகார்ஜுனா கார்கேவுக்கு வெற்றி வாய்ப்பு திட்டவட்டமாக தெரிய வந்திருக்கக்கூடிய, நிலையில் சசிதரூர் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்திருக்கிறார். காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தல் போட்டியில் இருந்த அசோக் கெலாட், திக்விஜய் சிங் ஆகியோர் போட்டியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.