உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்எல்ஏ அதிதி சிங் கடந்த வியாழக்கிழமை அன்று முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை சந்தித்து பேசினார். இதற்கு விளக்கம் கேட்டு காங்கிரஸ் கட்சி சார்பில் அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்த மாதத்தில் எம்எல்ஏ அதிதி சிங் இரண்டாவது முறையாக முதலமைச்சரை சந்தித்துள்ளதால் காங்கிரஸ் கட்சியினர் குழப்பமடைந்துள்ளனர்.
இதுகுறித்து பேசிய அதிதி சிங், நான் அனுமதி பெற்றுதான் முதலமைச்சரை சந்தித்தேன். வாரம் ஒருமுறை முதலமைச்சரை சந்திக்க நேரம் வழங்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில்தான் அவரை சந்தித்து எனது தொகுதி பிரச்னைகள் சம்பந்தமான ஆலோசனையில் ஈடுபட்டேன் என்று தெரிவித்துள்ளார்.
இதற்கு அம்மாநில காங்கிரஸ் தலைவர் அஜய் குமார் லல்லு, அதிதி சிங் கூறியது நண்பகதத்தன்மை வாய்ந்ததாகயில்லை, அவர் உண்மையான பதிலளிக்காவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியிருக்கிறார். இம்மாத தொடக்கத்தில் லக்னோவில், காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தலைமையில் நடைபெற்ற போராட்டத்தை அதிதி சிங் தவிர்த்தது குறிப்பிடத்தக்கது.