Categories
அரசியல் மாநில செய்திகள்

சட்டசபையில் இருந்து காங்கிரஸ் வெளிநடப்பு…!!

காவேரி மேலாண்மை வாரியம் குறித்து ராகுல் பேசியதாக பொய் சொல்ல கூடாது என்று காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர்.

தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகின்றது. இதில் காவேரி மேலாண்மை வாரியம் குறித்து பேசிய தமிழக முதலவர் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி கர்நாடகத்தில் ஈடுபட்ட தேர்தல் பிரசாரத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் காவேரி மேலாண்மை வாரியம் கலைக்கப்படும் என்றும் , மேகதாதுவில் அணைகட்ட அனுமதி வழங்கப்படும் என்றும் தெரிவித்ததாக கூறினார். இது சர்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இன்று சட்டப்பேரவை கூடியதும் , காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் ராகுல் காந்தி காவேரி மேலாண்மை வாரியம் கலைக்கப்படும் , மேகதாதுவில் அணை கட்டப்படும் என்று சொல்லியதாக முதலவர் சொன்னது தவறானது. இதை அவர் குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று கூறிய நிலையில் அதற்க்கு அனுமதி அளிக்காததால் காங்கிரஸ் கட்சியினர் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு  செய்துள்ளனர்.

Categories

Tech |