போயஸ் கார்டன் இல்லம் எனக்கு சொந்தம் என்பது ஏற்கனவே முடிவு செய்யப்பட்டு விட்டது என்று ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா தெரிவித்துள்ளார்.
அதிமுக தொண்டர்களான மக்களுக்காக நான் எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை தொடங்கி இருந்தேன். இரண்டு ஆண்டுகளாக பல சோதனைகள் , பல கட்டங்களை தாண்டி இந்த இயக்கத்தை நடத்தி வந்தேன். எனது அத்தையும் தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான அம்மா அவர்களின் இலட்சியக் கனவு இன்னும் நூறாண்டு காலம் அனைத்திந்திய அண்ணா திராவிடமுன்னேற்ற கழகம் இருக்க வேண்டும் என்ற அவர் லட்சித்தை ஏற்றுக் கொண்டு நான் தொடங்கிய இயக்கத்தை அதிமுகவுடன் இணைக்க வேண்டும் என்ற முடிவுகளை எடுத்துள்ளோம்.
இந்த முடிவுக்கு நான் நடத்தி வந்த பேரவையின் அனைத்து நிர்வாகிகளும் ஆதரவு அளித்துள்ளனர். சமீபத்தில் நடைபெற்ற தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற இடைத் தேர்தலிலும் நாடாளுமன்ற பொதுத் தேர்தலிலும் அதிமுகவிற்கு ஆதரவு தெரிவித்தோம். உடல்நிலை பாதிக்கப்பட்டதால் அரசியல் பணிகள் மேற்கொள்வது பணிகளை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.அதிமுகவில் எந்த பொறுப்பையும் நான் கேட்கவில்லை. போயஸ் கார்டன் இல்லம் எனக்கு சொந்தம் என்பது ஏற்கனவே முடிவு செய்யப்பட்டு விட்டது என்று தீபா தெரிவித்தார்.