செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ஆண்டிப்பட்டி பெரியகுளம் இடை தேர்தல்நடந்தது. 22 சட்டமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் நடக்கிறது. அதில் 9 வந்தால் தான் நாங்கள் அம்மாவுடைய அரசை நிலை நிறுத்த முடியும். அந்த 9 வரக்கூடாது அப்படின்னு என்ன பண்ணுனாரு ? தன்னுடைய மாவட்டத்தில் இருக்கின்ற ஆண்டிப்பட்டி, பெரியகுளம் அந்த 2 தொகுதி MLAவை தோற்கடிக்கிறார்.
ஆனால் அந்த 2 தொகுதியிலும் அவரின் அருமை மகன் ரவீந்திரநாத் லீடிங்கில் வராரு. அதில் 9 சீட்டு எடுக்கலைனா அன்னைக்கு ஆட்சி பொய் இருக்கும். அப்போ அவரோட காழ்ப்புணர்ச்சி என்ன ? இந்த 2 சீட்டும் வரக்கூடாது, மொத்தத்தில் அதிமுக வராது. எடப்பாடி முதலமைச்சர் ஆக முடியாது, அம்மாவுடைய அரசை கவுத்து விடலாம் அப்படின்னு நினைச்சாரு.
அப்போ கெட்ட எண்ணம் தானே இருக்கு அவருக்கு, அந்த எண்ணம் வரலாமா ? சட்டமன்ற பொதுத்தேர்தல் வருது. அந்த பொதுத்தேர்தல் வரும் போது தேனி மாவட்டத்தில் இவர் மட்டும்தான் வெற்றி பெறுகின்றார் என சரமாரியாக ஓபிஎஸ்ஸை ஜெயக்குமார் விமர்சனம் செய்தார்.