பாரத ஸ்டேட் வங்கியானது மூத்த குடிமக்களுக்கான வட்டி விகிதத்தை 7 சதவீதத்திலிருந்து 6.9 சதவீதமாக குறைந்துவிட்டது.
ஓய்வுபெற்ற மற்றும் வயது முதிர்ந்த பலர் வங்கிகள் தரும் வட்டியை தான் வாழ்வாதாரமாக கருதுகின்றனர். பாரத ஸ்டேட் வங்கி அண்மையில் ஒரு லட்சத்திற்கான முதலீட்டிற்க்கான வட்டி விகிதத்தை 3.50 லிருந்து 3.25 ஆக மாற்றி கால் சதவீதமாக குறைத்த நிலையில், இதர வங்கிகளும் இதனை பின்பற்ற உள்ள நிலையில் முதியவர்கள் கூடுதல் பங்கு சந்தை போன்ற வழிகளை நாட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர்.
கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத வகையில் வட்டி விகிதங்கள் குறைந்துள்ள நிலையில், மேலும் குறைய வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வட்டி விகிதம் 6 சதவீதத்திற்கு கீழ் குறையும் பொழுது வட்டியை நம்பி வாழும் மூத்த குடிமக்களிடம் அது சமூகரீதியான அமைதியின்மையை ஏற்படுத்தும் என்று பஞ்சாப் நேஷனல் வங்கியின் தலைவர் கருத்து தெரிவித்துள்ளார். இவ்வாறு இருக்கையில் இதற்கான காரணமாக பணவீக்கம் 5% ஆக உயர்ந்துள்ளது என்பதையும் வங்கி அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.