Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

மலச்சிக்கல், வாயு பிரச்னையா…”அப்போ இத ட்ரை பண்ணுங்க”… நல்ல ரிசல்ட் கிடைக்கும்..!!

மலச்சிக்கல் வாயு மற்றும் வயிறு உப்புசம் போன்ற பிரச்சனைகள் நீங்க இதை மட்டும் சாப்பிட்டால் போதும் நல்ல பலன் கிடைக்கும்.

தினமும் உடலுக்கு ஆரோக்கியம் தரும் அதிக அளவு சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ளவேண்டும். சில வகைகளை அதிகம் எடுத்துக் கொள்வதால் பல்வேறு நோய் ஏற்படும். குறிப்பாக பெரும்பாலோனோருக்கு மிகப்பெரிய பிரச்சனையாக இருப்பது மலச்சிக்கல்.

அதனை சரிசெய்ய

அகத்திக் கீரை, வெந்தயக் கீரை ஒரு கைப்பிடி,

ஓமம் 50 கிராம்,

மிளகு 5 கிராம்,

சீரகம் 5 கிராம்,

பூண்டு ஐந்து பற்கள்,

காய்ந்த மிளகாய்-3,

தண்ணீர் அரை லிட்டர்,

உப்பு மற்றும் பெருங்காயம் தேவையான அளவு

உப்பு மற்றும் பெருங்காயம் தவிர அனைத்தையும் தண்ணீர்விட்டுக் கொதிக்கவைத்து பாதியாக சுண்ட வேண்டும். அதன் பிறகு அதனுடன் உப்பு மற்றும் பெருங்காயம் சேர்த்து சாப்பிட்டால் மலச்சிக்கல், வயிறு உப்புசம், குடல் புண் ஆகியவை குணமாகும். அனைத்து வயதினரும் இதனை சாப்பிடலாம். உங்களின் பிரச்னைக்கு ஒரு நிரந்தர தீர்வாக இது அமையும்.

Categories

Tech |