Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

“மலச்சிக்கலை குணமாகும் சீரகசம்பா”… உங்களுக்கு தெரியுமா…? கட்டாயம் சாப்பிடுங்க..!!

சீரக சம்பா அரிசி பலருக்கும் இது நம் பாரம்பரிய அரிசி என்று தெரியாமல் இருக்கலாம். பழங்குடி வகை அரிசிக்கு எந்த அறிமுகமும் தேவையில்லை. இந்த வார்த்தை உடனடியாக பிரியாணியை தான் ஞாபகப்படுத்தும். நல்ல நறுமணமுள்ள ஒரு அரிசி. வீடுகளிலும் ஹோட்டல்களிலும் பெரும் புகழ் பெற்று வருகிறது.

இந்த அரிசியின் பெயரை சீரகம் என்பதிலிருந்து பெறப்படுகிறது. இந்த அரிசியை நாகப்பட்டினம் திருச்சி தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் சாகுபடி செய்கின்றனர். பாரம்பரிய அரிசி வகைகள் இது ஒன்று. இதிலுள்ள ஊட்டச்சத்துக்கள் நமக்கு எந்த வகையில் நன்மை தருகிறது என்பது குறித்து பார்ப்போம்.

நன்மைகள்:

இதில் செலினியம் அதிக அளவில் உள்ளது. பெருங்குடல் மற்றும் குடலில் இருந்து பிரீ ரேடிக்களை அகற்ற உதவும்.

மார்பக புற்றுநோயை எதிர்த்துப் போராடுகிறது. நல்ல கொழுப்புக்களை அதிகரிக்கும். நீரிழிவு நோயாளிகளுக்கு இது மிகவும் சிறந்தது.

நார்ச்சத்து அதிகம் இருப்பதால் கலோரிகளைக் கட்டுப்படுத்தும். மலச்சிக்கலைப் போக்க உதவுகிறது.

தைராய்டு போன்ற பிரச்சினைகளில் இருந்து நம்மை பாதுகாக்க இந்த அரிசி உதவுகிறது.

Categories

Tech |