சிறுமியை கடத்தி திருமணம் செய்த குற்றத்திற்காக கட்டிட தொழிலாளியை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சியில் 13 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்த சிறுமி கேரளாவில் இருக்கும் ஒரு பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் புரவிபாளையம் பகுதியில் வசிக்கும் கட்டிட தொழிலாளியான பாரதிகண்ணன் என்பவருக்கும் இந்த சிறுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறிவிட்டது. இதனை அடுத்து திடீரென காணாமல் போன சிறுமியை அவரது பெற்றோர் அனைத்து இடங்களிலும் தேடி பார்த்துள்ளனர்.
ஆனாலும் அவர் கிடைக்காததால் சிறுமியின் பெற்றோர் பொள்ளாச்சி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பாரதிகண்ணன் சிறுமியை கடத்தி சென்று கோவிலில் வைத்து திருமணம் செய்தது தெரியவந்துள்ளது. அதன்பின் காவல்துறையினர் பாரதிகண்ணனை போக்சோ சட்டத்தில் கீழ் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.