Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மார்பில் உள்ள நகக்கீறல்கள்… கட்டிட தொழிலாளியின் மர்மமான மரணம்… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

கட்டிட தொழிலாளி மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை மாவட்டத்திலுள்ள அண்ணாநகர் சாந்தி காலனியில் இருக்கும் தனியார் சொந்தமான இடத்தில் புதிதாக கட்டிடம் கட்டுமான பணியானது தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த கட்டுமான பணியில் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த குமார் என்பவர் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் திருமங்கலம் காவல் துறையினருக்கு கட்டிட தொழிலாளி குமார் மர்மமான முறையில் இறந்து கிடப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் நடத்திய சோதனையில் குமாரின் கழுத்து நெரிக்கப்பட்டதற்கான தடயமும், அவரது மார்பில் நகக்கீறல்களும் இருந்துள்ளது.

அதன்பின் அவரது உடலை மீட்டு காவல்துறையினர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கட்டிடத் தொழிலாளர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் குமாரை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனரா என்ற கோணத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |