வேன் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் கட்டிட தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை மாவட்டத்திலுள்ள மேலூர் பகுதியில் பெரிய கருப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கட்டிட தொழிலாளியான முனிசாமி என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் முனிசாமி தனது மோட்டார் சைக்கிளில் உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டு மீண்டும் இரவு நேரத்தில் வீடு திரும்பியுள்ளார். இதனை அடுத்து முனிசாமி கொட்டானிபட்டி சாலையில் சென்று கொண்டிருக்கும் போது, குறுக்கே நின்ற வைக்கோல் ஏற்றிய வேன் மீது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மோதி விட்டது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த முனிசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.